கொரோனா நோய்த்தொற்றினிமித்தம் மார்ச் 22ல் தொடங்கப்பட்ட ஊரடங்கானது தற்போது தளர்வுகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தளர்வு அறிக்கையில் மத்திய அரசானது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உரிய வழிகாட்டுதலின் அடிப்படையில் திறப்பதற்கான நெறிகளை வகுத்து அதை மாநில அரசின் உரிமைகளுக்கு விட்டுக்கொடுத்ததின் பயனாக, தமிழக அரசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் வரலாம் என்று அறிக்கை செய்து பின்னர் திரும்பப்பெறப்பட்டது. மேலும், தொடர்ந்து தளர்வுகளின் அறிவிப்பில், நவம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற திட்டவட்டமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு பின்னர் உறுதியான தேதி அறிவிப்பிற்காக பெற்றொர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் திறப்பு தேதியை திரும்பவும் ஒத்திவைத்துள்ளது.
ஆனால், தமிழக மக்கள் அனைவரும் பல வேறுபட்ட சிந்தனையுடையவர்களாதலால், கொரோனா நோய்த்தொற்றைக் குறித்த மக்களின் சிந்தனைகளும், மனவலிமையும் வேறுபட்டதாயிருக்கிறது. மேலும், இக்கட்டுரையின் விளக்கங்களில் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளை மற்ற கய்ச்சலின் அறிகுறிகளோடு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகங்களையும், பொது மற்றும் தனியார் துறை ஆசிரியர்களின் நிலையையும், மாணவர்களின் உண்மையான நிலையையும் விளக்குகிறதாயிருக்கிறது.
இதுவும் கொரோனாவா?
தலைவலி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, தொண்டை வலி, சுவை அறியாமை இவையனைத்தும் கொரோனாவுக்கான பொது அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் அனைவரும் இத்தகைய அறிகுறிகளுடைய காய்ச்சலை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளோம் என்பது நமக்குத் தெரிந்ததே. அப்படியென்றால், இத்தகைய அறிகுறிகளுடைய காய்ச்சலை ஏன் கொரோனா என்று சொல்லி தனிமனித இடைவெளி, மாஸ்க், சானிடைசர் என்று பயன்படுத்த வேண்டிய நிலையுள்ளது?. காலநிலை வேறுபட்டதாலும், உணவு பழக்கவழக்கங்களாலும் ஏற்பட்ட மாற்றங்கள் மனிதர்களுடைய மனம் மற்றும் உடல் வலிமையையும் பலவீனமாக்கியிருக்கிறது. இதன்விளைவாக, 40 வயதிற்கு மேற்பட்டோர் இவ்வித அறிகுறிகளையும் தாண்டி பலவிதமான நோய்களை சுமந்து வாழ்கிறார்கள். மேலும், இளவயதுடையோரும் பலவிதமான சோதனைகள், குறிக்கோள்கள் என்று ஓய்வில்லாத வேலையாயிருப்பதால் பல மன அழுத்தங்களை சந்திக்கிறார்கள். ஆகவே, சில சாதாரண அறிகுறிகளுடைய நோய்களுக்கும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில் வாழும் மக்கள் மத்தியில், மரணம் நிகழ்வதற்கு காரணம் கொரோனா அறிகுறிகள் என்றில்லாமல் அதற்கு அப்பாற்பட்டு அநேக காரணங்களும் அடங்கியிருக்கிறது. அகவே, மனிதர்களின் மரணத்திற்கும், பலவீனத்திற்கும், கொரோனா தான் காரணம் என்று சாமானிய மக்களால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. மேலும், இத்தகைய அறிகுறிகள் ஒரு சாதாரணமானவைகளாகத்தான் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், ஒருவருக்கு அடிக்கடி ஏற்படும் பலவீனம் (சளி, இருமல், தலைவலி, உடல் சோர்பு.......) கொரோனாவின் தாக்கத்தில் இருமடங்காக வெளிப்பட்டு சாதாரண காய்ச்சலாக மாறுகிறது எனவே, கொரோனாவுக்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடுகிறது. இதனால், பெருமளவில் மரணம் இல்லை என்று பொதுமக்களால் அனுபவ ரீதியாக அறிந்து கொண்ட உண்மையாகும் .
இருதரப்பட்ட மக்கள்
கொரோனா நோய்த்தொற்றைக் குறித்து பயமுடையவர்கள், பயமில்லாதவர்கள் என இரண்டு வகைப்படுத்தலாம். அப்படியென்றால், யாருக்கு பயம், யாருக்கு பயமில்லை?. இத்தகைய இருதரப்பு பிரிவினரையும் சந்தித்து அவர்களிடம் இவற்றைக்குறித்து விவாதித்தப் பின்னரே இக்கட்டுரையானது வடிவமைக்கப்பட்டது. லாக்டவுன் மற்றும் அன்லாக் காலகட்டத்தில் பயத்தையும், பயமில்லா சிந்தனையை உருவாக்குவது ஒரு தனிமனிதனுடைய பொருளாதாரம் மற்றும் பொருளாதார காரணிகளே என்றால் அது மிகையாகாது. எனவே, பொருளாதார ரீதியாக அதாவது அதிக சேமிப்பு, நல்ல வருமானம் ஈட்டிதரக்கூடிய வேலை பெற்றிருக்கும் வளருகின்ற, வளர்ந்த மக்கள் மத்தியில் கொரோனாவைக் குறித்த பயம் மேலொங்கியுள்ளது. மாறாக, இத்தகைய வளர்ச்சிக்காக அனுதினமும் கடினமாக உழைக்கக்கூடிய மக்கள் மத்தியில் கொரோனா நோய்த்தொற்றைக் குறித்து சிறிதளவும் பயமில்லை. கொரோன குறித்த பயமுடையவர்கள் பயமில்லாதவர்களையும் பயமுறுத்தும் பண்புடையவராயிருக்கின்றனர். காரணம், தொற்றினிமித்தம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் பொருளாதார ரீதியாக வளர்ந்தவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்து, குடும்பத்தை நிர்வகிப்பது இலகுவாயிருக்கிறது. ஆனால், பொருளாதார வலிமை குறைந்த மக்களால் இது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆகிலும், கொரோனாவைக் குறித்த பயமுடையவர்களைக்காட்டிலும் பயமில்லாதவர்கள் அதிகம் தான்.
நிர்வாகங்களின் நிலைமை
இத்தகைய சூழலில் கல்வித்துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்களும் மாணவர்களிடமிருந்து முழுக்கட்டணம் வசூலிப்பதிலும், தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு காட்டியும், வெகு சிலருக்கு மட்டும் அரை ஊதியம் வழங்கி ஆன்லைன் வகுப்புகளுக்கான பணிகளை ஒதுக்கியும் செயல்படுவதாக ஆசிரியர்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களின் பாடு பெரும்பாடாக உள்ளதாக தகவல். ஆசிரியர்கள் பெரும் தியாகிகளாக மாறியுள்ளனர். அநேகர், தங்களது படிப்பை மறந்து மாற்று தொழில்களையோ, கூலித்தொழில்களையோ செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால், அவர்களின் நிலைமையை இன்னமும் கண்டுகொள்ளாத அரசாங்கம், மீடியாக்கள், சமூக ஆர்வலர்களால் இவர்களது பாடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்று விடியும் என்று.
மாணவர்களின் நிலை
முழு ஊரடங்கு, தொடர் கல்வி நிலையங்கள் மூடல் எத்தனை மாணவர்களை பாதுகாத்துள்ளது?. பொது மக்களின் அனுபவமாக குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் ஒருவித தொற்று நோயை சந்தித்து மருத்துவமனையின் உதவியின்றி பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால், கல்வி நிலையங்களை திறப்பதில் அரசு காட்டும் முரண்பாடுகள் மாணவர்களின் உடல் நலனுக்கென்று பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறார்கள் என ஒப்புக்கொள்ளமுடியவில்லை. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் பொது இடத்தில் விளையாடிக்கொண்டும், உறவினர்கள் வீட்டிற்கு அல்லது சுற்றுலா தலங்களுக்கோ, பொது இடங்களுக்கோ சென்று மகிழ்ச்சியாக பொழுதைக்கழிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாததாயுள்ளது.
மேலும், மாணவர்கள் மனதளவில் கல்வியைக்குறித்தும், எதிர்காலத்தைக்குறித்தும் துணிச்சலற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, எப்படியும் கல்வியில் தேர்ச்சியடைந்துவிடலாம் என்பதோடு, கற்றுக்கொள்ளும் எண்ணமும், கடின உழைப்பும் மாணவர்கள் மனதிலிருந்து அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே, அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் எதிர்காலத்தைக் குறித்த உதாசினத்தை நீக்குவதற்கும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் நிலைமையை ஆராய்ந்து, கல்வித்துறை மேம்பட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் செயல்படுத்த முயலுமாயின், இது ஆசிரியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.